பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு இலங்கை கிரிக்கெட் நிதி ஒதுக்கீடு
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே (Sunil Kumara Gamage) தெரிவித்தார்.
அதன்படி, குறித்த நோக்கத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வருடாந்தம் சுமார் 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பங்களிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (24) வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விளையாட்டு உபகரணங்கள்
பாடசாலை கிரிக்கெட்டுக்கு தேவையான உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது முதல் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, போட்டிகளை நடத்துவது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஊடாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாடி பல இடங்களில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |