தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் - வெளியான பின்னணி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
மினுவாங்கொடை - வகோவ்வ பிரதேசத்தில் 83 வயதுடைய முதியவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமான வாக்குவாதம் முற்றியதையடுத்து சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் காயமடைந்த நபர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்