சர்வதேச நாடுகளின் அவதானத்துக்குள் இலங்கை
sri lanka
new zealand
crisis
Jacinda Ardern
By Vanan
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern )கூறியுள்ளார்.
நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜெசிந்தா ஆர்டர்ன், இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய தாம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதனால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை தாம் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி