பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து! போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (01) முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் எரிபொருள் வழங்கப்படுகின்றது. எனினும் எரிபொருளினை பெற்றுக்கொள்ளும் சில தனியார் பேருந்துகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சில தனியார் பேருந்துகள் எரிபொருளை பெற்றுக் கொள்வதுடன், அதனை வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் இலங்கை போக்குவரத்து சபை அண்மையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.
இந்தநிலையிலேயே எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது .
