கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் இலங்கை - முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..!
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரத்தின் நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்காத வகையில் வெறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் தற்போது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை
இதனால் சிறிலங்கா அரசாங்கம் குறித்த சட்டம் கடுமையான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அது தொடர்பான உறுதியை சபைக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் உடன்படிக்கையை அங்கீகரித்த பின்னர்
இலங்கை கடைப்பிடிக்க உறுதியளித்த கடமைகளை உள்நாட்டு
சட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்காக குடியியல் மற்றும்
அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக சபை நினைவூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
