கஞ்சிபானி இம்ரானை விடுதலை செய்ய அனுமதி - கொழும்பு நீதவான் நீதிமன்றம்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானை விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரின் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரான், காவல்துறை அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
சந்தேகநபர் முதலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிய காவல்துறையினர், சந்தேகநபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதேவேளை, சந்தேகநபரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)