இலங்கை கலவர பூமியாகும்!! ரணில் எச்சரிக்கை தகவல்
Ranil Wickremesinghe
Sri Lankan protests
rambukkana shooting
By Vanan
பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
றம்புக்கன பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
றம்புக்கன அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி