மொட்டு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தலைவராக தொடரும் மகிந்த!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி பொறுப்புகளுக்கு இன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று (15) நடைபெற்றிருந்த நிலையிலேயே, இன்று (16) இது தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டின் போது, கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
புதிய உறுப்பினர்களின் நியமனம்
இந்த நிலையில், கட்சியின் ஏனைய பொறுப்புக்களுக்கான திய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் புதிய பொருளாளராக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தவிசாளராக உத்துராவல தம்மரத்தன தேரர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |