மின் விநியோகம் தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள புதிய தகவல்
புதிய இணைப்பு
பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதுளை, மத்துகம, அவிசாவளை, கம்பஹா, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அதனை சூழவுள்ள பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் தெற்கில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பின் பிரதான மின் வழங்கல் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்து மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
Power will be restored islandwide within another two and a half hours says CEB.#SriLanka #PowerCutLK #SriLanka @netblocks Metrics show a decline in internet connectivity across Sri Lanka as the country suffers a widespread power outage. pic.twitter.com/6b1KYtTJL1
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) December 9, 2023
மின்தடைக்கான காரணம்
கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகத்தை சீர்செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் இன்று(9) முன்னறிவித்தலின்றி மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மின்சார சபையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உடனடி நடவடிக்கை
மேலும், கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறைக் கண்டறிந்து, மின்சார விநியோகத்தை சீர்செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |