தீவிரமடையும் தேர்தல் களம்: தமிழர் தாயகத்தை நோக்கி நகரும் வேட்பாளர்களின் கவனம்
ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் (MM Nilamdeen) தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் தென்னிலங்கை வேட்பாளர்களின் கவனம் வடக்கு, கிழக்கு பக்கம் திரும்பியுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மீதம் இருக்கும் நான்கு நாட்களில் ரணில் (Ranil Wickremesinghe) முக்கிய காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்த பின்னணியில் இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி தபால்மூல வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாகவும், அதிகளவிலான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தெரிவித்த மேலும் சில தகவல்கள் காணொளியில் பின்வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |