ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறை-புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி!
வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்துடன், இன்றைய தினம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் புலம்பெயர்ந்து தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் நிதிகளை அனுப்பி வருகின்றனர். எனினும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு திட்டமாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்காமை, ஏற்றுமதி உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான காரணங்களால் இலங்கையில் வெளிநாட்டு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, இலங்கையில் வாழும் புலம்பெயர் மக்கள் புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் தமது நாட்டுக்கு அனுப்பும் நிதியை மட்டுப்படுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.



