ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் - அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்ளூர் வருவாய் (திருத்தம்) சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட வரிகள் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தனது சான்றிதழை பதிவு செய்ததையடுத்து நேற்று (19) இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சபாநாயகரின் சான்றிதழுடன், இந்த சட்டம் 2022 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டமாக சட்ட அமைப்பில் சேர்க்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.
அப்போது, சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்புக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக முப்பத்தாறு வாக்குகளும் கிடைத்தன.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்