சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

SriLankan Airlines Sri Lanka Government Of Sri Lanka
By Sathangani Mar 14, 2026 04:04 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபாயை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலையை மேம்படுத்த, முகாமைத்துவத்தினால் மூன்று ஆண்டுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபாவை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

தேசிய விமான சேவை 

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் நிதிச் சுமையாக இருந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு தீவு நாடாக, நமக்கு சொந்தமான தேசிய விமான சேவை அவசியம் என்பதுதான் எமது கொள்கை.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு | Srilankan Airlines Govt New Strategic Revival Plan

எதிர்காலத்தில் நிதி மற்றும் செயல்பாட்டு ரீதியான ஒத்துழைப்பை வழங்கக்கூடிய முதலீட்டுப் பங்குதாரர்களை இணைத்துக்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எனினும், விமான சேவையின் தேசிய அடையாளத்தையும், வர்த்தக நாமத்தையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. சில நாடுகளுக்கு நேரடி விமானப் பயணங்களை வழங்கும் ஒரே நிறுவனம் இதுவாகும்.

மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு

மத்திய கிழக்கு வரலாற்றில் பெரும் தாக்குதலை அறிவித்தது அமெரிக்கா! அழிக்கப்படும் ஈரானின் முக்கிய தீவு

சர்வதேச முதலீட்டாளர்கள் 

சுற்றுலாத் துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நேரடி இணைப்பு மிகவும் அவசியம். உலகளாவிய ரீதியில் விமான நிலையங்களில் எமக்குக் கிடைத்துள்ள 'லேண்டிங் ஸ்லாட்கள்' ஒரு மூலோபாயச் சொத்தாகும்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு | Srilankan Airlines Govt New Strategic Revival Plan

இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் தேசிய விமான சேவையின் பலத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் வலுவடைந்த பின்னரே, சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சிறந்த பங்குதாரர்களைத் தெரிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் பலன் தராவிடின், அரசாங்கம் தனது அணுகுமுறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார். 

இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள்!

இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்