நாளையதினம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏற்படவுள்ள சுகவீனம்
நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை (09) சுகவீன விடுப்புப் பதிவு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்காக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பிரச்சனைகளுக்கு உரிய கவனம் செலுத்தாத அதிகாரிகள்
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக முனசிங்க, தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகளின் இந்த புறக்கணிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை இவ்வாறு சுகவீன விடுப்புப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என பொதுச் செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |