தீபாவளி பண்டிகை : விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இறந்த கோழிகள்
Diwali
Batticaloa
Public Health Inspector
Chicken
By Rusath
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கோழிகள் ஏற்றிசெல்லும் வாகனங்கள் போற்றவற்றில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் விசேட பரிசோதனை நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2026) மேற்கொள்ளப்பட்டிருந்தன.
களுவாஞ்சிக்குடி பொது சுகாதாரப் பரிசோதகர் த.கஜன் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
கைப்பற்றப்பட்ட இறந்த கோழிகள் அழிப்பு
இதன்போது தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி இறந்த நிலையிலிருந்த கோழிகள் கைப்பற்றப்பட்டதோடு வியாபாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட இறந்த கோழிகள் பொதுசுகாதாரப் பரிசோதகரால் அழிக்கப்பட்டன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி