ரணிலின் புதிய சட்டம் மகிந்தவை பாதுகாக்கவே....
ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பதற்காகவே புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை கொண்டுவந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருணா பிள்ளையான் ராஜபக்ச இவர்கள் இரண்டு குழுக்கள் அல்ல ஒரு குழுக்களாகவே தான் நான் பார்க்கின்றேன் மகிந்த ராஜபக்ச அவருடைய அரசியலை நிலை நிறுத்துவதற்காக இந்த மண்ணில் கர்ணாவையும் பிள்ளையானையும் பாவித்துள்ளார்கள்.
கர்ணாவும் பிள்ளையானும் சேர்ந்து இந்த மண்ணில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களை ஏந்தாத எங்களை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தியது கடந்த காலங்களில் உங்கள் அனைவருக்கும் தெரியும்
கருணா - பிள்ளையான் - ராஜபக்ச
கர்ணாமான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அந்தக் கட்சியின் பிரதி தலைவராக இருந்தார் இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ரகித் எக்னலி கூட இந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தாலும் பிள்ளையான் கருணா போன்றவர்களாலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.
இங்கு இடம் பெற்று இருக்கின்ற அனைத்து விதமான கொலை கொள்ளை கடத்தல்களுக்கு இவர்களே மூல காரணமாக இருந்துள்ளார்கள். இராணுவப் புலனாய்வின் அறிக்கையின்படி இந்த கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டல் படுகொலை செய்யப்பட்ட விடயங்களில் கருணாவும் பிள்ளையானும் மகிந்த ராஜபக்சவும் இருக்கின்றார்கள் என்பது வந்து அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அதை நாங்கள் புதிதாக பார்க்க வேண்டியதில்லை. இதனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இராணுவ புலனாய்வு கருணா பிள்ளையான் ராஜபக்சே என்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம்.
ஆகவே எனது கணவர் கடத்தப்பட்டதில் இவர்களுடைய தொடர்பு இருப்பதாக அறிகின்றேன். அது மட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதற்காக நான் காளியம்மாள் ஆலயத்தில் இருந்து ஒரு நேர்த்திக்கடனை முன்னெடுத்தேன்.
அந்த நேர்த்திக்கடன் இறுதியாக மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் எனது கணவர் எக்னலிக்கோடாவின் கடைசி சுவாசக் காற்று அங்கே தான் இருந்துள்ளது. ஆகவே அந்த இடத்தில் எனது கணவரின் ஆசையும் எனது ஆசையும் அந்த அக்கறைபற்று மண்ணில் இறுதியாக அவரது சுவாசம் காற்று பிரிந்துள்ளது என்பதை கூற விரும்புகின்றேன்
ரணிலின் புதிய சட்டம்
இன்று என்னைப் போன்று பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்
இந்த நாட்டில் இந்த ராஜபக்ச அரசாங்கத்தை துரத்துவதற்காக மக்கள் நடத்திய போராட்டம் கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு துரத்தப்பட்டார். அதேபோன்றுதான் இன்று இந்த அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வருகின்றது.
அது இந்த சட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளும் அரசாங்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டங்களை நிறைவேற்ற விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்.
ஆகவே எமது போராட்டம் தொடரும் எமது கணவர்கான நீதி கிடைக்க வேண்டும். இந்த மட்டக்களப்பு மண்ணுக்கு நான் முதலாவது தடவையாக வந்திருக்கின்றேன். எனது கணவரின் சுவாசக் காற்று பிரிந்தது இந்த மட்டக்களப்பு மண்ணில் என்று தான் அறிகின்றேன்.
அந்த வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று காளி கோயிலுக்கு முன்பதாக எனது கணவருக்கான பிரார்த்தனையும் இடம் பெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
