விடுதலைப் புலிகளின் தலைவரின் சித்தாந்தத்தை பின்பற்றிய மாமனிதர் - சட்டத்தரணி சுகாஸ்
இருட்டறையில் கறுத்த பூனையை தேடுவது போன்றது ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வைத் தேடுவது என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரையில் தெரிவித்திருந்தார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் (Sugash Kanagaratnam) தெரிவித்தார்.
இலங்கையின் (Srilanka) ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் தமிழர்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற முடியாது என்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சித்தாந்தத்தை மாமனிதர் குமார் பொன்னம்பலம் பின்பற்றியதாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சுட்டிக்காட்டினார்.
யாழ் (Jaffna) கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனிநாடு கோரி போராடிய தமிழினம் இன்று சமஷ்டி தன்மை என்று கதைக்க ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார பங்கீடு வேறு அதிகார பரவலாக்கம் வேறு என்பதில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தெளிவான கருத்தியலை கொண்டிருந்தார் என்றும் என்றும் சுகாஸ்குறிப்பிட்டார்.