சிவனடிபாத மலைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்...!
சிவனடிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிவனடிபாத மலை நோக்கி படையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் எந்த காலமும் இல்லாத வகையில் இந்த முறை அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தருவதனால் நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதிகளும் நிறைந்துள்ளதாகவும் மற்றும் அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்கி வருவதாகவும் நல்லதண்ணி காவல் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிவனடிபாத மலை
அதேபோல் உள்நாட்டு யாத்திரிகர்கள் இம்முறை சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய தொடருந்து மற்றும் அரச பேருந்துகள் மூலமாகவும் அதிகளவில் வருகை தந்து விட்டு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மே மாதத்தில் வரும் பூரணை தினமான வைகாசி விசாக நாளுடன் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |