இலங்கையில் பொருத்தமற்ற கல்வி முறை - சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை
S. Sritharan
Education
By Vanan
அரசாங்கம் தற்போதைய கல்வி முறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
பொருத்தமற்ற கல்வி முறை

மேலும் உரையாற்றிய அவர், அரசாங்கம் மாணவர்களின் கல்வியிலே ஐந்தாம் தர புலமைப் பரிசில், பதினோராம் தர பரீட்சை ஆகியவை பொருத்தமற்ற கல்வி முறை.
இன்னமும் சரியான கல்விக் கொள்கைக்குள் அரசாங்கம் வரவில்லை. இதனை திருத்தி அமைப்பதன் மூலமே சிறந்த எதிர்காலமுள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்ற பரிசில் வழங்கும் நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர், அயல் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி