தமிழீழ வைப்பகத்தின் நகை மற்றும் பணத்துக்கு நடந்தது என்ன..! சிறிலங்காவிடம் வினா
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நகைகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு சொந்தமான நிதி தொடர்பாக எந்தவொரு சிறிலங்கா அரசும் பொறுப்புக் கூறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் உகண்டா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடுகளை செய்துள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கோரவில்லை என்ற கருத்தை மேற்கோள் காட்டி பேசுகின்ற போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்களாகிய நாங்கள் அதிகாரப் பகிர்வை கோரவில்லை. அப்படியானால் நீங்கள் தமிழீழம் தருகின்றீர்களா ? என கேள்வியெழுப்பினார்.
தமிழர்கள் வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வை விரும்பவில்லையா ? இலங்கையோடு சேர்ந்து வாழ விரும்புகின்றார்களா ? அல்லது தமிழர்கள் சுதந்திர நாடொன்றில் சுயமாக வாழ விரும்புகின்றார்களா என்ற வாக்கெடுப்பை நடாத்த நீங்கள் தயாரா எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்