யாழ். நாவாந்துறை சென் மேரிஸிற்கு அபார வெற்றி
யாழ் மண்ணில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் சுப்பர்சனை வீழ்த்தி நாவாந்துறை சென்மேரிஸ் அணி அபார வெற்றி பெற்றது.
வீரர்களின் வேகமான ஆட்டத்தினால் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சென்மேரிஸ் அணி வீரர்கள், தமது வழமையான ஆட்ட வேகத்தின் ஊடாக முதல் கோலினை 15ஆவது நிமிடத்தில் பெற்றனர்.
அடுத்த 26 ஆவது நிமிடத்தில் வில்சன் எலோகோர் இரண்டாவது கோலை சென்மேரிஸ் அணிக்கு பெற்றுக்கோடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 37 ஆவது நிமிடத்தில் சுப்பர்சன் அணிக்காக பிரியங்கரா முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, முதல் பாதியாட்டம் 2:1 என்ற கோல்கணக்கில் சென்மேரிஸ் அணி முன்னிலைபெற்றது. இரண்டாம் பாதியாட்டத்தில் அனுபவ வீரர் ஞானருபன் சென்மேரிஸ் அணியை முன்னிலைப்படுத்தி 3ஆவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் தண்ட உதை மூலம் சுப்பர்சன் அணிக்காக 87ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பிரியங்கரா பெற்றுக்கொடுக்க, மேலதிக நேரத்தில் அபினேஸ் சென்மேரிஸ் அணிக்கான 4ஆவது கோலைப்பெற்றுக் கொடுத்தார். ஆட்ட நேரமுடிவில் 4:2 கோல் கணக்கில் சென்மேரிஸ் அணி அபார வெற்றி பெற்றது.








