நாடகங்களை அரங்கேற்றுவது பிரயோசனமற்றது: கர்தினால் ஆவேசம்
மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும்.
அரச தலைவருக்கும் பிரதமருக்கும் ஏற்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
இதுபோன்ற செயற்பாடுகளை இப்போதிலிருந்தாவது நிறுத்தி , புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்வதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திக்கான் சென்றிருந்த பேராயர் நேற்று (04) புதன்கிழமை நாடு திரும்பினார்.
இதன் போது கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடகங்களை அரங்கேற்றுவது பிரயோசனமற்றது.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்றார்.
