இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பில் பறந்த உத்தரவு
Colombo
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Jaso
இதுவரையில் இராஜாங்க அமைச்சுக்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏக்கநாயக்க இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சுக்கள்

இதன்படி இதுவரையில் இராஜாங்க அமைச்சுக்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை எனவும் அவை அமைச்சரவையின் அலகாக கருதப்பட வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.