உயர்வைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை குறியீடுகள்
இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று நண்பகல் சிறிய உயர்வை பெற்றுள்ளது.
இதில், முக்கிய குறியீடான அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 0.06 சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்றைய நண்பகல் வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 358.7 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதி
இதில் உணவு, பானங்கள் மற்றும் புகையிலை துறை 201.3 மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதியுடன் முன்னிலை வகித்த்துள்ளன.

இதன்படி, All Share Price Index (ASPI) 13.19 புள்ளிகள் (0.06%) அதிகரித்து 21,221.29 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, S&P SL20 குறியீடு 7.90 புள்ளிகள் (0.13%) உயர்ந்து 5,951.12 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
ASPI குறியீட்டின் உயர்வுக்கு John Keells Holdings, Dialog Axiata, Aitken Spence மற்றும் Browns Investments ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் பங்கு ஒதுக்கீடு
மறுபுறம், Hatton National Bank (HNB), DFCC Bank மற்றும் Ceylon Grain Elevators நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை பதிவு செய்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, Tess Agro PLC நிறுவனத்தின் 125 மில்லியன் சாதாரண வாக்குரிமைப் பங்குகள், தனியார் பங்கு ஒதுக்கீட்டின் (Private Placement) மூலம் 2026 ஜூலை 21 முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்