ஜப்பானிய தூதுவரின் மனைவி தங்கியிருந்த விருந்தகத்தில் கல்வீச்சு தாக்குதல்: காவல்துறை பரிசோதகர் கைது
ஜப்பானுக்கான (Japan) தூதுவரின் மனைவி தங்கியிருந்த புத்தலவில் உள்ள விருந்தகம் ஒன்றின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதான காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இத்தாக்குதல் சம்பவம் நேற்று(4) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மையத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கலந்துகொண்ட பின்னர், அவர் குறித்த விருந்தகத்தில் தங்கியுள்ளார்.
கற்களை வீசி தாக்குதல்
இதன்போது,விருந்தகத்தின் அருகில் வசித்து வந்த முன்னாள் பிரதான காவல்துறை பரிசோதகர் விருந்தகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தூதுவரின் மனைவியான மரிகோ மிசுகோஷி, சம்பவம் குறித்து விருந்தக உரிமையாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததையடுத்து, விருந்தக நிர்வாகம் புத்தல காவல் நிலையத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.
மதுபோதை
அதனையடுத்து, முன்னாள் காவல்துறை அதிகாரியான ரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உ்ள்ளதாக புத்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்தின் போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        