மக்களோ வரிசையில் நாடாளுமன்றில் பாரிய செலவில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் பாரிய செலவில் விரைவில் பிரித் ஓதுவதை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரித் ஓதுவதனால் நாட்டில் மக்களின் வரிசைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி.
நாட்டு மக்கள் 365 நாட்களும் வரிசையில் நிற்கும்போது நாடாளுமன்றத்தில் இவ்வாறு பணத்தை வீண் விரயம் செய்வது சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே விஜேசிறி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நிகழ்வை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவையில் இருந்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
