பிரித்தானியாவில் அடுத்தடுத்து உருவெடுக்கும் புயல்!! பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!
weather
uk
forecast
storm barra
By Vanan
பிரித்தானியாவில் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் அர்வென் புயல் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது புயலான பார்ரா ( Barra) தற்போது வீசிவருவதால் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு கடும்காற்றும் மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவுக்குரிய முன்னெச்சரிக்கைகள் விடுக்கபட்டுள்ளன.
இந்த முன்னெச்சரிக்கைகளால் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நாளை காலைவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வட அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் தென்மேற்கு ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுக் காரணமாக அயர்லாந்தில் 12 மாவட்டங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்