ஹோர்முஸ் நீரிணை திறப்பு விவகாரம்! தோஹாவை வந்தடைந்து பிரித்தானிய பிரதமர்
மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் வலைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தோஹாவை வந்தடைந்துள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
கெய்ர் ஸ்டார்மர் , அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான முயற்சிகள் குறித்து விவாதித்து வருகிறார்.
செய்ய வேண்டிய பணிகள்
இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஸ்டார்மர், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மீட்டெடுக்க பிராந்திய கூட்டாளிகளின் தேவையையும் வலியுறுத்தினார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் பின்னணியில், கெய்ர் ஸ்டார்மரின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |