கிழக்கில் மாடுகளுக்கு பரவும் விசித்திர நோய் (படங்கள்)
கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் பகுதியில் தோல் கழலை நோய்த் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய், முள்ளிப்பொத்தானை தம்பலகாமம், வான்எல அக்போபுர மற்றும் ரஜஎல பேராறு போன்ற இடங்களில் இந்த நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கால் நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும்,இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ள கால்நடைகள் மேய்ச்சலில் நாட்டமின்மையாக இருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தடுப்பூசி அதிக விலை
எனினும் பரவி வருகின்ற இந்நோய்க்கு தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கால்நடை பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கம் இந்த நோய்த்தாக்கத்திற்கு கூடிய விரைவில் ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


