இலங்கை - பிரித்தானியாக்கு இடையே மூலோபாய கலந்துரையாடல்..!
London
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மூலோபாய கலந்துரையாடல் லண்டனில் உள்ள சர்வதேச பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன பங்கேற்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பலதரப்பட்ட உறவுகள் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இந்த மூலோபாய கலந்துரையாடல் மூலம் இருதரப்பிற்கும் கிடைக்கப்பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு இணையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பொதுநலவாய நாடுகளின் உதவி பொதுச் செயலாளரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி