வடகொரிய அதிபரால் கடும் சிக்கலில் ட்ரம்ப் - சொந்தக்கட்சியே போர்க்கொடி
வடகொரியா அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் - க்கு வாழ்த்து கூறியதால் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் போர்டில் வடகொரியா இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டு இருந்தார்.
சொந்தக்கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்பு
டொனால்ட் டிரம்ப் தனது பதிவில், "கிம் ஜங் உன்-க்கு வாழ்த்துக்கள்! எனக்கூறி அது தொடர்பான செய்தியையும் பகிர்ந்து இருந்தார்.
இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்ததற்கு அவரது சொந்த கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படும் தலைவர்களும் கட்சியின் மாகாண தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிம் ஜாங் உன் அமெரிக்காவின் எதிரி, அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். டிரம்ப் ஏமாற்றுத்தனமாக நம்புகிறார். அல்லது அதிபர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்றெல்லாம் அவரது கட்சியினர் கடுமையாக வசை பாட தொடங்கினர்.
நெருக்கடியை கொடுக்கலாம்
கிம் ஜாங் உன் -க்கு வாழ்த்து தெரிவித்து தேவையில்லாத சிக்கலில் சிக்கி கொண்டோமே என டிரம்ப் தற்போது யோசிக்காத குறைதான். அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டும் டொனால்ட் டிரம்பிற்கு கிம் ஜாங் உன் - விவகாரம் கொஞ்சம் நெருக்கடியை கொடுக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
