தமிழீழத் தாயகத்தின் விடுதலை: 3வது நாளை கடந்த ஈருருளிப் பயண போராட்டம்
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கோரியும் சுதந்திர தாயகமே ஈழத்தமிழர்களின் இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி, ஐ.நா நோக்கிய இடம்பெற்றுவரும் ஈருருளிப் பயணம் இன்று(17) தனது 3 வது நாளை நெதர்லாலாந்தில் கடந்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து நேற்றுமுன்தினம் ஆரம்பித்து நேற்று நெதர்லாந்தை வந்தடைந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் நேற்று ஹேக் நகரில் அமைந்துள்ள அனைத்து குற்றவியல் நீதிமன்றம் முன்பாக ஒரு ஒன்றுகூடலை நடத்தியிருந்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நேற்று, மாலை றொட்ராம் மாநகரில் நிறைவடைந்த பின்னா இன்று தனது மூன்றாம் நாள் பயணத்தை தொடர்ந்திருந்தது.
ஈழத்தமிழர்களின் இறுதி தீர்வு
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அரசியல் மையங்களில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் சந்திப்புக்களுடன் இந்த பயணம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை நோக்கி நகர்ந்துவருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, இந்தப்போராட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |