15 வயதுடைய மாணவனின் சட்டவிரோத செயல் - வளைத்துப் பிடித்தது காவல்துறை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sumithiran
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற மாணவன்
கந்தானை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவன் ஒருவன் தனியார் வகுப்பு ஒன்றிற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்
கந்தானை தெற்கு படகம பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஒன்றிற்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவனுக்கு போதைப்பொருளை வழங்கிய நபர் யார் என்பது குறித்து கால்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

