மடிக்கணனியால் மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Death
Mega Power
By Sumithiran
மடிக்கணினிக்குரிய சார்ஜரை ஈரத்துடன் மின் இணைப்பில் இணைக்கச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட இடிகட்டியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கிய மாணவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
செனத் இந்துவர என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கிய போது ஈரத்துணி அணிந்திருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.