ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!
யாழ்.வலிகாமம் வலயத்திற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்துள்ளார்.
இதனால் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்குள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை பாடசாலை ஆசிரியர் கடந்த 31ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார். ஆசிரியர் தன்னை கடுமையாக தாக்கியதாக பெற்றோரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பிரிவு காவல்துறையினர் மாணவனிடம் வாக்குமூலங்களைப் பெற்று அதனை வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை மதியநேர செய்தித் தொகுப்பில் காண்க.
