சிக்குவாரா நாமல்..! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது சட்டத்தரணி அந்தஸ்தை மோசடியாகப் பெற்றாரா என்பதை விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியினால் இன்று (03) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு தலைமை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விசாரணை
லஞ்சம் அல்லது ஊழலை எதிர்த்துப் போராடும் குடிமக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த சிஐடி தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி அந்தஸ்தைப் பெறுவதற்காக இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சைக்கு முன்னிலையான நாமல் ராஜபக்ச மோசடி செய்தாரா என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் ஆவணங்களை ஆராய்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிஐடியினர் மேலும் கூறியுள்ளனர்.
You May Like This
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
