மாணவி பாலியல் வன்புணர்வு - பாடசாலை அதிபர் கைது!
Sri Lanka Police
Crime
Sri Lankan Schools
By Pakirathan
மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதிபர் கைது
சந்தேகநபரான 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த மாணவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி