தாத்தா,பாட்டியை பார்க்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
இன்று (14) பிற்பகல் பலபிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் கொட்டாவ ஆனந்த கல்லூரி மாணவனான பதின்மூன்று வயதுடைய பித்திகா ரிசாது என்பவரே காணாமல் போயுள்ளார்.
பாட்டி மற்றும் தாத்தாவை பார்ப்பதற்காக
இந்த மாணவன் நேற்று (13) பலப்பிட்டியவில் வசிக்கும் தனது பாட்டி மற்றும் தாத்தாவை பார்ப்பதற்காக கொட்டாவையில் இருந்து பலப்பிட்டிக்கு வந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரதேச இளைஞர்கள் நீந்திச் சென்று தேடிய போதும்
இம்மாணவனுக்கு தெரிந்த மேலும் இருவர்களுடன் பலப்பிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற நிலையில், இந்த மாணவன் திடீரென அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மாணவனை பிரதேச இளைஞர்கள் நீந்திச் சென்று தேடிய போதும் அவர் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |