தாம் கற்கும் பாடசாலையை விற்க முயன்ற மாணவர்களால் பரபரப்பு
அமெரிக்காவில் தாம் படிக்கும் பாடசாலையை மாணவர்கள் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் கற்கும் சில மாணவர்கள் , பிரபல ரியல் எஸ்டேட் இணையதளத்தில், பாடசாலையை விற்கும் வகையில் விளம்பரம் செய்துள்ளனர்.
விளம்பரத்தில் மாணவர்கள் தெரிவித்த விடயம்
In what appears to be a senior prank, someone has posted Meade High School on Zillow for the bargain price of $42,069. https://t.co/eyGQwzdisC pic.twitter.com/TXQuXtmgDu
— Brooks DuBose (@b3dubose) May 24, 2023
இதை ஒருவர் படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த இடம் பகுதி நேரம் சிறைச்சாலை, இதில் 15 கழிவறைகள் உள்ளன. நல்ல சமைக்கும் இடமுள்ளளது,. சாப்பிடும் இடமும் விளையாட்டு கூடமும் உள்ளது. இங்கு நிறைய எலிகள், பூச்சிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன் விலை 42,069 டொலர் என்று தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
