சீனாவிற்கு இளைய பங்காளராக மாறப்போகும் இலங்கை : இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை
பல்வேறு சர்வதேச கொள்கைகளில் மோடி அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாகவும் அந்த நிலைமை இலங்கை விடயத்திலும் தொடர அனுமதிக்கக்கூடாது என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ச அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும்.
இல்லையென்றால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
If India wants an ally for the Indian Ocean long term then India must give deferred interest $10 billion loan to the Rajapaksa government now or face China getting one more junior partner. Modi govt has failed in so many foreign policy issues. Let not Sri Lanka be another
— Subramanian Swamy (@Swamy39) December 30, 2021