சீனி, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு - அரசாங்கம் அதிருப்தி
உள்ளுர் சந்தையில் சீனி மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள வேளையில், சீனிக்கான விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக கோதுமை மாவின் விலையையும் அதிகரிக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி 13 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், கோதுமை மாவின் விலை உலக சந்தையில் 15 வீதத்தால் குறைந்துள்ளதாகவும், எனவே விலை அதிகரிப்பு சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.
