உயிருக்கு அச்சுறுத்தல்: உடனடி பாதுகாப்பு கோரும் சுமனரத்ன தேரர்
தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் தனக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாக தேரர் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நீக்கம்
ஒகஸ்ட் 30 ஆம் திகதி எனது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஐந்து சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நீக்கப்பட்டனர், இது ஒரு கடுமையான பாதுகாப்பு இடைவெளியை உருவாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்..

ஒகஸ்ட் 15 ஆம் திகதி காட்டு யானைகளால் விகாரையின் தர்மசாலைக்கு சேதம் ஏற்பட்டதாக மகா ஓயா சிவில் பாதுகாப்புப் படை கட்டளை அதிகாரியுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நீக்கம் செய்யப்பட்டதாக தேரர் கூறினார்.
அம்பாறை பன்சல்கல ரஜமகா விகாரையில் அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேரர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 மணி நேரம் முன்