ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதம் நடத்தி கேட்டு மக்கள் ஆராயகூடிய விதத்திலே ஒரு பகிரங்க தளத்தை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் சர்வதேச நாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள், இனப்பிரச்சினைகள், அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறை தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |