தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டி: எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் (ITAK) பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் தலைவர் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தானும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதன் மூலமும் எங்களோடு இணைந்து பயணிக்கின்ற கட்சிகள் தனித்தனியே
போட்டியிடுவதன் மூலமும் குறித்த தேர்தல் முறையின் கீழ் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்