தயாரான கோட்டாபய -ராஜபக்ச -ரணில் டீல் - அம்பலப்படுத்திய சுமந்திரன்
சுமந்திரனின் ஆதரவு
அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தவறாக பயன்படுத்தப்பட்டு 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டது ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவறல்ல என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இணக்கம் தெரிவித்த கோட்டாபய
"தடுப்பு காவல் உத்தரவுகளில் அவர் (அதிபர்) மட்டுமே கையொப்பமிட முடியும், 20 வது திருத்தம் அவருக்கு அமைச்சர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் வழங்குகிறது" என்று அவர் கூறினார்.
(3) @RW_UNP knew this very well but chose to do a deal with the R’s in order to satiate his life-long ambition. We would’ve been in the same pickle he is in now, if we took office with SLPP majority and @GotabayaR in the saddle. Parl Elections is the answer we must push for 3/3
— M A Sumanthiran (@MASumanthiran) September 11, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் முன்கூட்டிய தேர்தல்கள் போன்ற 21வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஏறக்குறைய இணங்கியதாகவும், இதன் மூலம் மக்கள் ஆட்சியாளர்களை மாற்றுவதற்கு வழி வகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலட்சியத்தை நிறைவேற்ற டீல்
அதிபர் விக்ரமசிங்க இதை நன்கு அறிந்திருந்தார் என்றும் ஆனால் தனது வாழ்நாள் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக ராஜபக்சாக்களுடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தார் என்றும் சுமந்திரன் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலே தீர்வாக இருக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் அதனை முன்னின்று செயற்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.