புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு சுமந்திரனின் அவசர அறிவிப்பு
புலம்பெயர் மக்களின் உரிய காணிகள் வடக்கில் இருந்தால் அது தொடர்பில் கட்டாயம் கவனம் எடுக்கவும் என சட்டத்தரணி சுமந்திரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயத்தை கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புலம் பெயர் மக்களுக்கான அன்பான வேண்டுகோள், உங்களுடைய காணிகள் வடக்கில் இருந்தால் வந்து உங்களுடைய உரிமைகளை கோருங்கள்.
அவ்வாறு, உங்களால் வர முடியாத பட்சத்தில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள், அல்லது உங்களுக்கு இங்கு இருக்கும் காணிகள் மீது அக்கறை இல்லை என்றால் அதனை அரசுக்கு செல்ல விட வேண்டாம்.
காணி இல்லாத மக்களுக்கு அதனை எழுதி கொடுப்பதற்கான நடவடிக்கையை சரி மேற்கொள்ளுங்கள், இவ்வாறு எப்படியாவது எமது நிலங்களை எமது மக்களின் கையிருப்பில் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்” என அவர் வலியுருத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
