சுமந்திரன், சித்தார்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அமெரிக்க பிரதிநிதி
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், தமிழ் அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் விக்டோரியா நூலண்ட், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன் உட்பட பல கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
வலுப்பெறும் ஜனநாயகம்
''வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் தீர்வுகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும்.'' என்றும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூவ் ஹக்கீம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், இன்று (01) அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் அவர் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)