கடும் வெப்பத்தால் ஒரே நிகழ்வில் பலியான பல இந்திய மக்கள் - மாநில முதல்வர் வெளியிட்ட தகவல்
India
By pavan
மும்பை நகரொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டோரில் 11 பேர் கடும் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்கர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
குறித்த பிரதேசத்தில் 38 பாகை சி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 பேர் மருத்துவமனையில்
இந்த நிகழ்விற்குப் பிறகு, கடுமையாக வெப்பப் பாதிப்புகளால் சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் வானிலை மையம் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி