கின்னஸ் சாதனை படைத்த சூரிய நமஸ்காரம்
புத்தாண்டையொட்டி சூரிய நமஸ்காரம் செய்தமை கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மோதரா சூரியக் கோவிலில் இந்த வழிபாடு இடம்பெற்றது.
இங்குள்ள மோதரா சூரியக் கோவிலில் புத்தாண்டையொட்டி காலையில் 4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் பதிவு
இந்த சாதனை நிகழ்ச்சி பற்றி பிரதமர் மோடி, குஜராத் 2024 ஆம் ஆண்டை ஒரு குறிப்பிட்ட சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமானது. அதில், மோதரா சூரியக் கோயிலும் அடங்கும்.
அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக
இங்கு அனைத்து மக்களும் ஒன்றுகூடி உலக சாதனை படைத்துள்ளனர். இது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்று. இந்த சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |