வரலாற்றை மாற்றியமைத்த சூர்யவன்ஷியின் 204 ஓட்டங்கள்

Cricket Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Dharu Nov 25, 2026 07:44 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ஓட்டங்களை குவித்து பல சாதனைகளை முறியடித்தது அவரது முழுமையான ஆதிக்க வெளிப்பாடாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் 7 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் அடங்கும்.

மேலும், சதம் பெற்ற வரிலையில் ஒரு இன்னிங்ஸில் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் பெற்றிராத அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டான 384.90-ஐ அவர் பதிவு செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு

ஐ.பி.எல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு

வில்லியர்ஸுக்குச் சொந்தமான நீண்டகால சாதனை

2015-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 33 பந்துகளில் 149 ஓட்டங்கள் (338.63 ஸ்டிரைக் ரேட்) குவித்து, தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரர் ஏபி. டி வில்லியர்ஸுக்குச் சொந்தமான நீண்டகால சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.

வரலாற்றை மாற்றியமைத்த சூர்யவன்ஷியின் 204 ஓட்டங்கள் | Suryavanshi S 204 Runs That Changed History

2023-ஆம் ஆண்டு டாஸ்மேனியாவுக்கு எதிராக தெற்கு அவுஸ்திரேலியாவுக்காக 38 பந்துகளில் 125 ஓட்டங்கள்(328.94 ஸ்டிரைக் ரேட்) குவித்த அவுஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், இந்த உயர்மட்டப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சூர்யவன்ஷியின் இந்த அபாரமான ஆட்டம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இந்தியா 'ஏ' அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றுத் தந்தது.

பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் பெரிதாக உதவவில்லை என்பதை உணர்ந்த பிறகு, தனது பலத்தை நம்பியதாக சூர்யவன்ஷி ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அவர் 52 பந்துகளில் சாதனை படைக்கும் இரட்டைச் சதம் அடித்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இந்தியா 'ஏ' அணியை ஏழு விக்கெட் வித்தியாச வெற்றிக்கு வழிநடத்தி, ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவை முன்னேறினார்.

IPL இல் மஹெல ஜெயவர்தனவுக்கு புதிய வாய்ப்பு

IPL இல் மஹெல ஜெயவர்தனவுக்கு புதிய வாய்ப்பு

நிதானமாக ஆடுவதே திட்டம்

15 வயதான அவர், 28 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட, வெறும் 53 பந்துகளில் 204 ஓட்டங்களை விளாசினார்.

வரலாற்றை மாற்றியமைத்த சூர்யவன்ஷியின் 204 ஓட்டங்கள் | Suryavanshi S 204 Runs That Changed History

இதன்மூலம், இந்தியா 'ஏ' அணி 250 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 14.2 ஓவர்களில் கடந்து 3 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவரது இந்த இன்னிங்ஸில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் அதிவேக சதம் மற்றும் இரட்டைச் சதம் ஆகியவை அடங்கும்.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கருத்து வெளியிட்ட சூர்யவன்ஷி, கடந்த இரண்டு போட்டிகளில் தனக்குக் கிடைத்த தொடக்கங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றத் தவறியதால், ஆரம்பத்தில் நிதானமாக களத்தில் இறங்கவே எண்ணியதாகக் கூறினார்.

கடந்த இரண்டு போட்டிகளில், நான் நிலைத்து ஆடினேன், ஆனால் அந்தத் தொடக்கங்களை பெரிய ஓட்டங்களாக மாற்ற முடியவில்லை.

அதனால், ஆரம்பத்தில் களத்தில் இறங்கி நிதானமாக ஆடுவதே திட்டமாக இருந்தது. ஆனால், ஓரிரு பந்துகளை எதிர்கொண்ட பிறகு, ஆடுகளத்தில் இருந்து பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

அதனால், எனது பலத்தை நம்பி ஆடினேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சூழ்நிலைகள் அனுமதித்ததாக சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

Ball டேம்பரிங் சர்ச்சை முழு ஆசி. அணிக்கும் தெரியும்! கவாஜாவுக்கு ஆதரவாக வோர்னர் குரல்

Ball டேம்பரிங் சர்ச்சை முழு ஆசி. அணிக்கும் தெரியும்! கவாஜாவுக்கு ஆதரவாக வோர்னர் குரல்

நம்பி ஆடிய ஆட்டம் 

அத்தோடு, “தன் மனதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்தால், நான் நிதானமாக விளையாடி நீண்ட நேரம் ஆடுவேன் என்பதுதான் என் ஒரே எண்ணமாக இருந்தது. அதனால் நான் என் ஆட்டத்தை நம்பி ஆட முயன்றேன்,” எனவும் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் ஆட்டம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், நான் நிதானமாக ஆட முயற்சிப்பேன். ஆனால் நல்லவேளையாக, என்னால் ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடிந்தது, அதன் பிறகு நான் என் விருப்பப்படி ஆட்டத்தை ஆடினேன்,” எனவும் கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021